வேலை தேடி மாநகரம் வரும் ஒவ்வொருவனுக்கும், ஏற்கனவே அங்கு வேலைபார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பன் அறை காத்திருக்கும்.
பாவனை பேச்சு உடை நடை முற்றிலும் மாறிப் போன அந்த நண்பன் வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருப்பான் ஆபீசுக்கு. பக்கத்து ஓட்டலில் அவன் அக்கௌண்டில் இட்லி வடை வாங்கி கொடுத்து விட்டு , சாயங்காலம் பாக்கலாம் என சொல்லி முதுகில் மாட்டிய லேப்டாப் பேக்கோடு விரைவான்.
அவன் ரூமில் கம்ப்யுட்டரில் நேற்று ரிலீசாகிய புது படம் டோரென்ட்டில் முழுமையாக தரவிறக்கம் ஆகியிருக்கும். அதை பார்த்துக் கழியும் முதல் நாள் பகல்.
No comments:
Post a Comment